Saturday, March 9, 2013

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உன் உள்ளம் அன்பால் நிறையட்டும் !
உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும் !
உன் கனவுகள் வானத்தை தொடட்டும் !
உன் வெற்றிகள் உன்னை  முத்தமிடட்டும் !
 
---------------------------------------------------------------------------------------------------------------------------
பொங்கி வரும் கொங்கு தமிழே !

வசீகரிக்கும் மழலை சிரிப்பே !

உள்ளத்தின் உண்மையே !

இதயத்தின் தூய்மையே !

பாசமிகு தம்பியே !

அன்பிற்குரிய நண்பனே !

கடல் அலையின் அதிர்வுகள் ...

கரைகளை வருடுவதைப்போல

இன்றைய நாளின் சந்தோசம் ...

எங்களையும் வருடி செல்லட்டும் உன்னோடு சேர்ந்து !

"உன் கனவுகள் வானைதொடட்டும் ;

வெற்றிகள் உனக்கு மாலையிடட்டும்!"

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  
------------------------------------------------------------------------------------------------------------------------
சந்தோசத்தின் அதிர்வுகள் ;
உள்ளத்தில் பூக்கட்டும் !-இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

புன்னகை மலரட்டும் ;
புது வாழ்வு பிறக்கட்டும் -இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

வெற்றிகள் குவியட்டும் ;
அதன் அலைகள் உன்னை நனைக்கட்டும்-இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

கனவுகள் நிறைவேறட்டும் ;
மகிழ்ச்சி நிறையட்டும் !-இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 
-------------------------------------------------------------------------------------------------------------------------
திசையெல்லாம் கொணரும் 
வாழ்த்துக்களின் அலைகள் 
உள்ளமெனும் மேகத்திரையில் 
அன்பெனும் அதிர்வுகளால் 
உற்சாக தூறல் பொழியட்டும் 
மகிழ்ச்சி பரவட்டும் !
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!

மறைமுக யுத்தம்


  வரலாற்றுப் பக்கங்களில் ஒரு தேசிய இனத்தை வலுக்கட்டாயமாக பலவழிகளில் அழிக்கின்ற பேரினவாதத்தின் கொடிய கைகள் இனி எப்போதும்  அரவணைக்க போவதில்லை !,பாறை போன்ற கடினமான மனமும் இனி எப்போதும் மாறபோவதில்லை !


    இன்று போர் மேகங்கள் குண்டு மழைகளைப் பொழிந்து ஆண்டுகள் பல நிறைவடைந்து இருக்கலாம் ஆனாலும் அடக்கி ஆளும் எண்ணமும் ,ஒரு இனத்தை அழிக்க துடிக்கின்ற எண்ணமும் மறைமுகமாக ஆரம்பித்து விட்டது என்ற செய்தியை இணையத்திலும் ,செய்திதாள்களிலும் இதயம் கொண்ட அன்பர்களின் வழியாக நாம் வேதனையுடன் இன்றும் படித்து கொண்டுதான் இருக்கின்றோம்.
    சிங்கள மொழியோ ,புத்த மதமோ ஒருநாளும் ஒரு இனத்தை அழிக்க முனைவது இல்லை .அப்போது யார் இதற்கு காரணம்?ஏன் இவ்வாறு செய்கிறார்கள் ?

கடந்த தொடர் எண் 1 இல் சிங்கள மொழி ,புத்த மதம் இன அழிவுக்கு காரணம் அல்ல என்று சொல்லி இருந்தோம் .ஏனெனில் ஆயிரம் ,ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும் சக மனிதனை மதிக்க தெரியாதவர்கள் தான் பிரச்சனைக்கு காரணமே அன்றி எப்போதும் மதங்களும் ,மொழிகளும் எந்த பிரச்சனைக்கும் காரணமாகாது !
                        எல்லா மனிதர்களையும் அப்படி நாம் சொல்லிவிட முடியாது .ஆனால் தமிழனுக்காக தமிழன் மட்டும் தான் போராட வேண்டும் என்பது இல்லை .இதே தீவில் விடுதலைக்காக எத்தனையோ தமிழர்கள் அன்று சிங்கள மக்களோடு சேர்ந்து போராடினார்கள் அப்போது தமிழர்கள் நினைத்து இருந்தால் தனி நாடு கேட்டு போய் இருந்திருக்க முடியும் .ஏன் செய்யவில்லை ?எதற்காக செயவில்லை ? அவர்கள் சிங்கள மக்களை முழுவதும் நம்பினார்கள் ,அவர்களோடு சேர்ந்து வாழ எண்ணினார்கள் .அப்படிபட்ட தமிழர்களுக்கு செயும் கைம்மாறு இதுதானா ?அன்புள்ளவர்கள் யோசிப்பார்கள் !
                   நீங்கள் புத்தனை தேடுகிறீர்கள் நாங்கள் புத்தனை மட்டும் 

                                               
அல்ல போதி மரத்தையும் அல்லவா தேடுகிறோம் !

தீண்டாமையில் ஏன் இவ்வளவு பித்தலாட்டம்?

தீண்டாமையில் ஏன் இவ்வளவு பித்தலாட்டம்?


   பிறப்பில் சிலர் உயர்ந்தவர் என்றும் , தாழ்ந்தவர் என்றும் நிர்ணயிக்கும் உரிமையை யார் இவர்களுக்கு கொடுத்தது?
கடவுளா என்றால் அதற்கும் சரியான தகவல் இல்லை .ஏன் என்றால் இங்கே கடவுளில் கூட இவர் உயர்ந்தவர் இவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இருக்கிறதே ?
   கீழ் சாதிக்காரனை கோவிலுக்கு வர அனுமதிக்காத இந்த சமூகம் ,அவர்கள் தரும் காணிக்கையை மட்டும் அனுமதிப்பது எவ்வாறு?
தாழ்ந்த சாதிகாரனை உயர்ந்த பதவியில் அமர்த்திப் பார்க்காத இந்த சமூகம் ,அவனிடம் இருக்கும் வாக்குரிமைக்காக பிச்சை எடுப்பதை விட கேவலமாக நிற்கும்  போது எங்கே போனது இந்த சாதி ? ஏன் கூலி வேலைக்காக தாழ்ந்த சாதிகரனை பணிக்கு  அமர்த்த வேண்டும்?அப்பொழுது ஒட்டாதா அந்த சாதி?
என்ன இது வேடிக்கை ? ஏன் இந்த கீழ்த்தனம்?

    ஒன்று மட்டும் தெரிகிறது ,தனக்கு அடிமையாய் இருப்பவன் நாளை நமக்கு சரிசமமாக வரக்கூடாது என்ற கேவல எண்ணமே இந்த சாதியை உருவாக்கி இருக்கிறது ,பின்னாடி வரும் சந்ததி அதை தொடர்கிறது ?
உண்மையில் கீழ் சாதி எனப்படுபவன் , சாதி என்ற நோயால் பாதிக்கப் பட்ட மிருகம் !

தொடரும் சோகம்

தொடரும் சோகம்!

எது தீவிர வாதம் ,எது சுந்தந்திரப் போராட்டம் என்பதை 21  ஆம் நூற்றாண்டிலும் நம்மால் புரிந்து கொள்ள முடியாத படி இந்த உலகில் அரசியல் ஆட்சி செய்கிறது.அதற்க்கு கண்ணீர்த் தீவே சாட்சி!
ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை என்றோ போன அந்த மக்களிடத்தில் சமீப காலத்தில் கடவுளின் மீதும் நம்பிக்கை இல்லை, இவ்வளவு ஏன் நம்பிக்கை மீதே அவர்களுக்கு நம்பிக்கை இல்லை!

உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத உயிர்கள் பிணங்களாக வாழும் இடத்தில், வலிகளை பொறுத்துக் கொண்டு பிணங்களை போல உயிர் வாழ்கின்ற மக்கள்.
ஒற்றுமை இல்லாது போனதால்,எதிர் காலமும் கேள்விக் குறியாய்ப் போன தேசிய இனம்!
யார் புரிந்து கொள்வார்கள்? யார் தீர்த்து வைப்பார்கள்? கேள்விகளே அதிகம்! இங்கே தொடரும் சோகம்!

ஏன் தமிழீழம்

ஏன் தமிழீழம் ? தமிழீழத்தின் தேவை ? எதற்காக தமிழீழம் ?
--------------------------------------------------------------------------------------------
இது போன்ற ஆயிரம் கேள்விகள் இங்கே..........இதோ அதற்க்கான காரணங்களுள் சில உங்கள் பார்வைக்கு.

திரிகோணமலையில் நடைபெற்ற இலங்கையின் 65-வது விடுதலை நாள் விழாவில் பேசிய அந்நாட்டு அதிபர் ராஜபட்ச, தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க முடியாது. நாட்டை இனரீதியாகப் பாகுபடுத்துவது நடைமுறை சாத்தியமில்லாதது என்று அறிவித்துள்ளார்.

லட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்து, லட்சக்கணக்கான தமிழர்களை அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு புலம் பெறச் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிய ராஜபட்ச, ஒரே மொழி - ஒரே மதம் என்று சர்வாதிகாரப் பாதையில் இலங்கையை வழிநடத்தி வருகிறார். அவரை சர்வதேச போர்க்குற்றவாளியாக உலக நாடுகள் பார்க்கின்றன.

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நீண்ட காலமாக அளித்துவந்த உறுதிமொழியை ராஜபட்ச மீறியிருக்கிறார். இதற்கு உலகெங்கும் வாழும் தமிழர்களும், இந்தியாவும், உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

1925 ஜூன் 25-ல் யாழ்ப்பாணத்தில் இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவர்கள், இலங்கை தமிழர் மகாஜன சபையுடன் செய்து கொண்ட உடன்பாடு முதன்முதலாக காற்றில் பறக்க விடப்பட்டது.


1944-ல் சிங்களமும், தமிழும் ஆட்சி மொழிகள் என்று ஜெயவர்த்தனா அரசு நிறைவேற்றிய சட்டத்தை மாற்றி 1956-ல் பண்டாரநாயக அரசு சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது.

1965-ல் அதிகாரத்தை பரவலாக்க தந்தை செல்வாவுடன் டட்லி சேனநாயகா செய்து கொண்ட ஒப்பந்தம் 1969-ல் கைவிடப்பட்டது. 1987-ல் ராஜீவ் காந்தியுடன் இலங்கை செய்து கொண்ட ஒப்பந்தம் 25 ஆண்டுகளாகியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு சிங்களர்கள் சார்பில் ஈழத் தமிழினத்துக்கு கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

செய்தி :தினமணி

அதுதான் உங்கள் இறையாண்மையா ?

பெயர் மாற்றம் தான் ஜனநாயகத்தின் வடிவமா? அதுதான் உங்கள் இறையாண்மையா ?
-------------------------------------------------------------------------------------------------------
தமிழர்களின் கலை, கலாசாரம், இலக்கியம், பண்பாடு, மொழி உள்ளிட்ட அனைத்தையும் அழித்திட கங்கணம் கட்டிக் கொண்டு ராஜபட்ச அரசு வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ் இனம்தான் அழிக்கப்படுகிறது. தமிழர்களின் ரத்தம் மழைபோல் தெளிக்கப்படுகிறது என்பது மட்டுமல்ல நாம் கண் போல் காத்த அருமை தமிழ் அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்ப் பெயரால் அழைக்கப்பட்ட பல கிராமங்களுக்கு சிங்களப் பெயர் சூட்டப்பட்டு வருகிறது. தோல்பூர் துபாபுரா என்றும், பருத்தி துறை பித்ராதோடுவா என்றும், கிளிநொச்சி கிரடிக்கா என்றும் முல்லைத் தீவு முகடூவா என்றும் மாற்றப்பட்டுள்ளது. போருக்குப் பிறகு இந்து கோயில்கள், தமிழர்களின் குடியிருப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. நம் நெஞ்சில் ஆழமாக பதிந்த தமிழ்ப் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. மொழியின் ஆக்கத்தை மறைக்க இப்படி பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

செய்தி :தினமணி

அவர்கள் நட்போ குண்டுகளால் துளைப்பது!

அவர்கள் நட்போ குண்டுகளால் துளைப்பது!
-----------------------------------------------------------
ஏ ராமேசுவரக் காற்றே
பார்த்து வீசு
நீ கச்சத் தீவைத் தாண்டி வீசினாய் என
குண்டுகளால் துளைக்கப் படலாம்
ஏ ராமேசுவர கடல் அலையே
ஆக்ரோசமாக தவழு உன் தற்க்காப்பிற்க்காக
நீ அமைதியாய் சென்றால்
குண்டுகளால் துளைக்கப் படலாம்
ஏ ராமேசுவர மீன்களே
எதிர் திசையில் நீந்தாதீர்கள்
வலைகளால் தடுக்கப் பட்டு
குண்டுகளால் துளைக்கப் படலாம்
ராமேசுவர மீனவர்களே உங்களுக்கு சொல்ல
என்னிடம் எதுவும் இல்லை......
எது நம் எல்லை என இங்கே நமக்கே தெரியவில்லை...
நம் நட்பு அமைதியாய் இருப்பது
அவர்கள் நட்போ குண்டுகளால் துளைப்பது!

புத்தர்

தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்கம் என்பதற்காகவோ ,நம் முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டார்கள் எனவோ எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக் கொள்ளக் கூடாது -புத்தர்

தீபம் ஒளிரட்டும்!

தீபம் ஒளிரட்டும்!
------------------------
கண்ணீர் எப்பொழுதும் உயர்வானது,உண்மையானது...
வலிகளை வெளிப்படுத்துவதில் மௌனத்தை விட கண்ணீர் சிறந்தது...

புத்தனின் தேசத்தில் ஒரு கண்ணீர்க் குரல் இன்னும் ஒய்ந்தபாடில்லை....
நம் சகோதரர்களின் வலிகளை எழுத்தால் உள்ளபடியே சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை...இருந்தும் தீபச் செல்வன் சொல்ல முனைந்து இருக்கிறார்.

இதோ அந்த வலிகளை பின்வரும் நிரலியில் இருந்து படிக்கலாம்

http://www.deebam.blogspot.in/


அவருடைய பேனா கூட அழுதிருக்கும் அவர்களின் சோக வலியைக் கண்டு. ஆனால் இன்னும் பலரின் கல் நெஞ்சே அங்கே சுவாசித்துக் கொண்டிருக்கிறது. கல் நெஞ்சு கரையுமா எனத் தெரியவில்லை. இவர்களின் சோகங்கள் தொலைந்து போகட்டும்.

"வீழ்வது மட்டும் அலையின் வேலையன்று மீண்டும் எழுவதும்தான்" என்ற வைரமுத்துவின் நம்பிக்கை வரிகளோடு நிறைவு செய்கிறோம்.

தூறல்[Thooral]
 

ஏதோ செய்கிறது

சூரியனைப் போல சுடவில்லை
நிலவைப் போல குளிரவில்லை
இருந்தும் ஏதோ செய்கிறது
அவள் பார்வைகள்....!!


Photo: சூரியனைப் போல சுடவில்லை
நிலவைப் போல குளிரவில்லை
இருந்தும் ஏதோ செய்கிறது
அவள் பார்வைகள்....!!

தூறல்[Thooral]
தூறல்[Thooral]